சுடச்சுட

    

    சுடுகாட்டு நிலத்தில் ரூ.10 லட்சம்செலவில் சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடு

    By திருத்தணி  |   Published on : 14th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்த திருத்தணி நகராட்சிக்குச் சொந்தமான சுடுகாடு நிலத்தை நகராட்சி நிர்வாகம் மீட்டு, ரூ.10 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    திருத்தணி நகராட்சிக்குள்பட்ட 20-வது வார்டில் அமைந்துள்ளது அமிர்தாபுரம் (குண்டலுôர்). இந்தப் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு நிலத்தை ஆக்கிரமித்து 5 வீடுகள், 2 கடைகள் ஆகியவற்றை தனியார் சிலர் கட்டியிருந்தனர்.

    இந்நிலையில், நகராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் அந்த இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள், கடைகளை அகற்றினர்.

    இதனைத்தொடர்ந்து, அந்த இடத்தில் சுற்றுசுவர் கட்டுவதற்கு நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. தற்போது, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai