சுடச்சுட

  

  செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணி: கருத்துக் கேட்புக் கூட்டம்

  By திருவள்ளூர்,  |   Published on : 14th September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படவுள்ளதையொட்டி மாற்றுப் பாதை அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் அங்கு இயக்கப்பட்டு வரும் கேட் மூடப்படவுள்ளது.

  இதற்கு மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: "திருநின்றவூர், திருவள்ளூருக்கு இடையேயுள்ள செவ்வாப்பேட்டையில் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

  இதனால் செவ்வாப்பேட்டை ரயில்வே லெவல் கிராசிங் எண் எல்சி-15 மேம்பாலம் பணிகள் முடியும் வரை மூடப்பட்டுள்ளது.

  இதுகுறித்து ஏற்கெனவே பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கருத்துகளும் பொதுமக்களிடமிருந்து பெறபட்டன.

  மேலும், பள்ளிச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் நலனுக்காக லெவல் கிராசிங் அருகில் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த மாற்றுப் பாதையில் இரண்டு சக்கர வாகனங்களும், நடந்துச் செல்பவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  கனரக வாகனங்களுக்கு மூன்று கி.மீ. தூரத்துக்கு அப்பால் மாற்றுப் பாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பணி நடைபெறும் வரை பொதுமக்கள் இந்த மாற்றுப் பாதையில் சென்று பணி நடைபெற முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார்.

  இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் துணை ஆட்சியர் ராகுல்நாத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காசி, ரயில்வே உதவி செயற்பொறியாளர் செங்குட்டுவன், செவ்வாப்பேட்டை பகுதி பொது மக்கள், அப் பகுதி மக்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai