சுடச்சுட

  

  புல்லரம்பாக்கம் ஏரியில் உடைக்கப்பட்ட கரைகள் சீரமைப்பு

  By திருவள்ளூர்,  |   Published on : 14th September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் ஏரியின் கரைகளை உடைத்து பயிர் செய்து ஆக்கிரமித்துள்ளதாக "தினமணி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து பொதுப்பணித் துறை சார்பில் கரையை சீரமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

  திருவள்ளூரை அடுத்துள்ளது புல்லரம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில் இருந்து தலக்காஞ்சேரி செல்லும் சாலையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 100 ஹெக்டேருக்கும் மேல் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட ஏரி உள்ளது.இந்த ஏரியை நம்பி அந்தப் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பயிர் செய்து வந்தனர்.

  இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர். மேலும் பயிர் செய்யும் பொருள்களை எடுத்துச் செல்லவும், மழைக் காலத்தில் ஏரியில் நீர் தேங்காத வகையிலும் பல இடங்களில் ஏரியின் கரைகளை உடைத்திருந்தனர்.

  இதுகுறித்த செய்தி "தினமணி' நாளிதழில் படத்துடன் வெளியானது.

  இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் அசோகன் தலைமையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் செந்தில்குமார், சிவக்குமார், எட்வின் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் உடைக்கப்பட்ட கரைகளை சீரமைத்தனர்.

  மேலும் மேற்கொண்டு ஏரிக் கரையை உடைக்காமல் இருக்கவும், உடைத்தாலும் ஏரிக்குள் வாகனங்கள் நுழையாத வண்ணம் ஏரியைச் சுற்றி கால்வாயும் வெட்டப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai