Enable Javscript for better performance
பெயின்டர் தற்கொலை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பெயின்டர் தற்கொலை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

    By திருவள்ளூர்,  |   Published on : 14th September 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது உறவினர்கள் மணவாளநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

    திருவள்ளூரை அடுத்த இலுப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ரவி (40). பெயிண்டராக வேலைப் பார்த்து வந்தார்.

    கடந்த மாதம் பூந்தமல்லி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரவி, பெயிண்ட் அடிக்கும் போது அந்த வீட்டில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

    இதையொட்டி பூந்தமல்லி போலீஸார், கடந்த 20 தினங்களுக்கு முன்பு ரவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    பின்னர் அன்று பிற்பகலில் ரவி வீடு திரும்பியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்காக பூந்தமல்லி போலீசார் ரவியை மீண்டும் அழைத்துச் சென்று இரவு வரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இரவு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ரவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். சனிக்கிழமை காலை உறவினர் ஒருவரின் மொபைல் போனில் ரவி பேசும்போது, போலீஸாரின் சித்ரவதை தாளாமல் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், மேலும் தற்போது இலுப்பூர் ஏரிக்கரையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து உறவினர்கள் அங்குச் சென்று மயங்கிக் கிடந்த ரவியை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    அப்போது அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த கடிதத்தை எடுத்து பார்த்தபோது தனது சாவுக்கு போலீஸார் தான் காரணம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் மணவாளநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து ராஜேஸ்வரி பூந்தமல்லி போலீஸார் மீது எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின்பேரில் உரிய விசாரணை மேற்கொள்வதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai