சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே வீட்டின் மாடியில் செல்லும் உயர் அழுத்த மின்சார வயரில் கைப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து 10-ஆம் வகுப்பு மாணவி இறந்தார்.

    திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் மேஷாக். இவர் தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநராக உள்ளார்.

    இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் ஹெலினா ராஜ்குமாரி (15) திருவள்ளூரில் உள்ள தனியார் சுயநிதிப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஹெலினா ராஜ்குமாரி வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டதால் மாடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மாடியை ஒட்டி சென்ற உயர் அழுத்த மின்சார வயரை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் வந்ததால் ஹெலினா ராஜ்குமாரி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவர் ஏற்கெனவே மருத்துவர்கள் இறந்ததாக கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai