Enable Javscript for better performance
மின் கம்பி அறுந்ததில் ரயில் சேவை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

     சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரவு வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த மார்கத்தில் உள்ள அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகில் சென்னை - சென்ட்ரல் செல்லும் மின் ரயில் பாதையின் மேலிருக்கும் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ், புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து அறுந்து விழுந்த மின் கம்பியை ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர். இதனால் இந்த மார்கத்தில் சென்னை- சென்ட்ரல் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai