சுடச்சுட

    

    வல்லப விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

    By திருவள்ளூர்  |   Published on : 14th September 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட ஜெயாநகரில் அமைந்துள்ள வல்லப விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கோயிலில் 3-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவுநாளையொட்டி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி, கோயிலில் கலசங்கள் வைக்கப்பட்டு மகா யாக பூஜை நடந்தது. பகல் 11 மணியளவில் மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து தீபாராதனையும், பகல் 12 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai