Enable Javscript for better performance
வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் செய்முறைப் பயிற்சிக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் செய்முறைப் பயிற்சிக் கருத்தரங்கம்

    By திருவள்ளூர்  |   Published on : 14th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பாச்சூரில் இயங்கி வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல், தொடர்பியல் துறை சார்பில் செய்முறைப் பயிற்சிக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கருத்தரங்கத்துக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் கே.சி.வாசுதேவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சசிகுமார், துறைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக புனேவில் உள்ள "ஆட்டிடியுட் அன்ட் பிலிப்ஸ்' நிறுவன முதன்மை அலுவலர் வி.முகுந்தன் பங்கேற்று பேசியது: உலக மின்னணுச் சந்தையில் நமது பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இந்தத் துறையில் இளம் பொறியாளர்கள் அதிக அளவில் கவனம் செலுத்தி தரம் மிகுந்தப் பொருள்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் விஜயபிரபு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai