சுடச்சுட

    

    130 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

    By ஊத்துக்கோட்டை  |   Published on : 14th September 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெங்கல் அருகே கொடுவெளியில் உள்ள ஜெயசூர்யா பொறியியல் கல்லூரியில் 130 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.

    ஊத்துக்கோட்டை வட்டம், வெங்கல் அருகே உள்ள கொடுவெளியில் உள்ள ஜெயசூர்யா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா, முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவுக்கு கல்லூரித் தலைவர் கே.ஜி.ராஜன் தலைமை வகித்தார். முதல்வர் வி.ஜெயக்குமார் அறிமுக உரையாற்றினார். இயக்குநர் பி.சிவக்குமார் வரவேற்றார்.

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 130 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரி பேராசிரியர் பி.கோபால் நன்றிக் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai