சுடச்சுட

    

    ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கிளைத் தேர்தல்

    By திருவள்ளூர்,  |   Published on : 15th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் வட்டார, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கிளைத் தேர்தல் சனிக்கிழமை நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர் வட்டார தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிளைத் தேர்தல் கடம்பத்தூர் கிளை வட்டாரத் தலைவர் வால்டர் ஜெபமணி தலைமையில் நடைபெற்றது.

    நிர்வாகிகள் கேபிரியல், வேதமாணிக்கம் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

    இதில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் நகரக் கிளைத் தலைவராக பால்ரத்னா, செயலாளராக பாலுமகேந்திரன், பொருளராக சிகாமணி, மகளிரணித் தலைவராக புஷ்பராணி, துணைத் தலைவராக கேபிரியல், துணைச் செயலாளராக இஸ்ரேல் ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    செயற்குழு உறுப்பினர்களாக பவானி, மகாலட்சுமி, எஸ்தர், அனிதா, மாவட்டச் செயற்குழு உறுப்பினராக அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai