Enable Javscript for better performance
உள்ளாட்சி இடைத்தேர்தல்: அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சி இடைத்தேர்தல்: அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

    By திருவள்ளூர்  |   Published on : 15th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்தும் விதிமுறைகள் குறித்து உதவித் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புறப் பகுதிகளில் பல்வேறு காரணங்களால் காலியான உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்தத் தேர்தலை நடத்தும் உதவித்தேர்தல் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் பேசியது: இம்மாவட்டத்தில் 6 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகள், 14 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 37 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்பது மிகவும் நுட்பமானத் தேர்தலுமாகும். ஆகையால், இந்தத் தேர்தலில் சிறிய அளவில் கூட விதிமுறைகள் மீறப்படாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்றார் அவர். இதனைத்தொடர்ந்து, அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) நக்கீரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai