சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 28-வது ஆண்டு விழா

    By திருவள்ளூர்,  |   Published on : 15th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 28-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

    மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, கல்வெட்டும் திறந்துவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கத்தின் செயல்பாடுகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜார்ஜ் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai