Enable Javscript for better performance
தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    By திருவள்ளூர்,  |   Published on : 15th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூரை அடுத்த இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). பெயின்ட்டர். இவர், கடந்த மாதம் பூந்தமல்லியில் உள்ள ஒரு வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வீட்டில் ஒரு கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இதையொட்டி, பூந்தமல்லி போலீஸார் சில முறை விசாரணைக்காக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

    அப்போது, போலீஸார் அவரை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் விசாரணைக்காக ரவியை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில், சனிக்கிழமை காலையில் இலுப்பூர் ஏரிக்கரையில் ரவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து, ரவியின் உறவினர்கள் சனிக்கிழமை மணவாளநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். தகவலறிந்த திருவள்ளூர் கோட்டாச்சியர் (பொறுப்பு) வீரப்பன், ஏ.டி.எஸ்.பி. சந்திரசேகர் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிற்பகல் 2 மணியளவில் உறவினர்களிடம் ரவியின் உடலை ஒப்படைத்தனர்.

    இந்தச் சம்பவத்தையொட்டி, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai