சுடச்சுட

    

    தலைக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி

    By திருவள்ளூர்,  |   Published on : 15th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியின் சார்பில் மாணவர்களின், தலைக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளியின் தாளாளர் விஷ்ணு சரண் தலைமை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் பங்கேற்று பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    திருவள்ளூர் நேதாஜி சாலையில் தொடங்கிய இந்தப் பேரணி, காந்தி சாலை, குளக்கரைச் சாலை, கிழக்குக் குளக்கரை சாலை வழியாக வந்து காமராஜர் சிலை அருகில் முடிவடைந்தது.

    பேரணியின்போது வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது குறித்த அவசியத்தையும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், அதனால் நமக்கு கிடைக்கும் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கியபடியும், வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பியும் மாணவர்கள்

    சென்றனர்.

    பள்ளித் தலைமை ஆசிரியை லட்சுமி கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai