சுடச்சுட

    

    சென்னை அம்பத்தூர் அருகே திருமணமான 5-ஆம் நாளில் பெண் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

    அம்பத்தூர் அத்திப்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அம்சா. இவரது மகள் சாந்தி (23). இவருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் கடந்த திங்கள்கிழமை திருமணம் நடந்தது.

    மறுவீட்டுக்காக கடந்த வியாழக்கிழமை கணவனை அழைத்துக் கொண்டு சாந்தி அம்பத்தூர் வந்தார்.

    கடந்த 3 நாளாக தாய் வீட்டில் இருந்த சாந்தி, சனிக்கிழமை மதியம் வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து சாந்தியின் தாய் அம்சா, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருமணம் நடந்து 5 நாள்களே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai