சுடச்சுட

  

  சென்னை ஆவடி அருகே பெண்ணை கொலை செய்து எரித்ததாக அவரது கள்ளக்காதலனை திருநின்றவூர் போலீஸார் கைது செய்தனர்.

  ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர் பாக்கம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் என்பவரின் மனைவி அம்சா (38). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  கடந்த 10 ஆண்டுகளாக கணவன் தன்ராஜை பிரிந்து வாழ்கிறார்.

  இதையடுத்து, வீட்டருகே வசித்து வந்த ஏழுமலையுடன், அம்சாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அம்சா, தீக்குளித்து தற்கொலைக்கு செய்துக் கொண்டதாக ஏழுமலை, திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  இதையடுத்து போலீஸார் அவரது உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்நிலையில் அம்சாவின் அக்காள் பூங்காவனமும், அவரது கணவர் பெருமாளும், திருநின்றவூர் காவல் நிலைய ஆய்வாளரிடம், அம்சா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், எரித்து கொல்லப்பட்டதாகவும், இச்சமபவத்தில் பெருமாள் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.

  இதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், அம்சா கொலை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

  இதையடுத்து போலீஸார் ஏழுமலையை கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai