சுடச்சுட

  

  அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அரக்கோணம் மக்களவை உறுப்பினர் திருத்தணி கோ.அரி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  திருத்தணி நகர அதிமுக இளைஞரணி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர்மன்ற உறுப்பினர் கேபிள் சுரேஷ் தலைமை வகித்தார். கவுன்சிலர் முனுசாமி முன்னிலை வகித்தார்.

  இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் மக்களவை உறுப்பினர் திருத்தணி கோ.அரி பங்கேற்று நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  இதையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுப்பாலட்சுமி தலைமை வகித்தார்.

  இதில் பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai