சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே இயங்கி வரும் இந்திரா கல்விக் குழுமத்தின் பிரியதர்ஷினி பல் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா கல்விக் குழுமத்தின் பிரியதர்ஷினி பல் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, சென்னை குளோபல் மருத்துவமனை ஆகியவை இணைந்து பொது மருத்துவம் முகாம் நடத்தியது.

    இந்திரா கல்விக் குழுமத் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் குளோபல் மருத்துவமனையின் துணைத் தலைவர் பாஸ்கர் ரெட்டி, இந்திரா கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இந்திரா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரியின் முதல்வர் விவேக் நாராயணன் வரவேற்றார். இந்த முகாமில், பொதுமக்களுக்கு இதயம், குடல், எலும்பு மூட்டு, புற்றுநோய், சர்க்கரை நோய், பொது மருத்துவம் ஆகிய 6 வகையான குறைபாடுகளுக்கு சிகிச்சை, ஆலோசனையும் அளிக்கப்பட்டது.

    காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். டாக்டர் கணேஷ் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai