சுடச்சுட

    

    கலப்புத் திருமணம் செய்ததால் தாக்குதல்: ஆட்சியரிடம் புகார்

    By திருவள்ளூர்,  |   Published on : 16th September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் எங்கள் குடும்பத்தினர் மீது அந்தப் பகுதி மக்கள் தாக்குதல் நடத்துவதாக பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட ஜனகராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் போதும். இவர், தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

    மனு விவரம்: எனது மகனான ஆனந்தகுமார் (24), ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் குடியிருப்பைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இதையொட்டி, ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், எங்களின் வீடு, அதே பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளை அடித்து உடைத்துள்ளனர்.

    இதில் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai