சுடச்சுட

    

    கிராமக் கல்விக் குழு கணக்காளர் தேர்வு: 144 பேர் பங்கேற்பு

    By திருவள்ளூர்  |   Published on : 16th September 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமக் கல்விக் குழு கணக்காளர் காலிப் பணியிடங்களுக்காக சனிக்கிழமை நடைபெற்ற தேர்வில் 144 பேர் பங்கேற்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமக் கல்விக் குழு கணக்காளருக்கான 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதற்கான பணியாளர்களை தேர்வு மூலம் தேர்வு செய்வது வழக்கம்.

    திருவள்ளூர் மாவட்டத்துக்கான தேர்வு வி.எம். நகரில் உள்ள ஆர்.எம். ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்தத் தேர்வில் மாவட்டம் முழுவதுமுள்ள பகுதிகளில் இருந்து 144 பேர் பங்கேற்றனர். சனிக்கிழமை பகல் தொடங்கிய இந்தத் தேர்வு 12.30 மணியளவில் முடிவடைந்தது.

    தேர்வின்போது மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுந்தர்ராஜன், மேற்பார்வையாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாற்றுத் திறனாளியின் பெரு முயற்சி: திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரைச் சேர்ந்தவர் நாச்சியப்பனின் மகன் மணிகண்டன் (34). 3 அடி உயரமே உள்ள மாற்றுத் திறனாளியான இவர் தாற்காலிகமாக அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் கிராம கல்விக் குழு தேர்வு குறித்து தகவல் அறிந்து அதற்காக விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றார்.

    அவருக்கு இரு கைகளிலும் விரல்கள் வளராததால் இருகைகளிலும் பேனாவை அணைத்தபடி மிகுந்த சிரமத்துடன் தேர்வை எழுதினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai