சுடச்சுட

    

    கிரேன் மீது லாரி மோதி விபத்து:போக்குவரத்து பாதிப்பு

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 16th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் அருகே கிரேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தச்சூரில் இருந்து கவரப்பேட்டை நோக்கி கிரேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சென்னை எண்ணூரில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி, முன்னால் சென்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதியது.

    இந்த விபத்தில் சாலை நடுவே கிரேன் கவிழந்தது. இதனைத்தொடர்ந்து, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸார் அங்கு சென்று, கிரேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்தில் கிரேன் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai