Enable Javscript for better performance
சேறும் சகதியுமாக மாறியுள்ள தலக்காஞ்சேரி சாலை- Dinamani

சுடச்சுட

    

    சேறும் சகதியுமாக மாறியுள்ள தலக்காஞ்சேரி சாலை

    By திருவள்ளூர்,  |   Published on : 16th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரில் இருந்து தலக்காஞ்சேரி செல்லும் சாலையானது சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவள்ளூர் காமராஜர் சாலையில் இருந்து தலக்காஞ்சேரிக்கு 2 கிலோமீட்டர் நீளச் சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாக தலக்காஞ்சேரி, புல்லரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல முடியும்.

    சாலையின் ஒரு பகுதி திருவள்ளூர் நகராட்சியிலும், மீதமுள்ள பகுதி தலக்காஞ்சேரி ஊராட்சியிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத அந்தச் சாலையில் கடந்த மாதம் செம்மண் சாலை அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்தச் சாலை முறையாகப் போடப்படாததால் லேசான மழைக்கே இந்தச் செம்மண் சாலை, சேறும் சகதியுமாக மாறி, நடந்து செல்வதற்குக் கூட தகுதியற்ற நிலையில் உள்ளது.

    மேலும், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கிடீரென சேற்றில் சிக்கிவிடுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன.

    எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து தரமான தார்ச் சாலை அமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai