சுடச்சுட

  

  திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

  By செங்குன்றம்,  |   Published on : 16th September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்குன்றத்தில் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

  செங்குன்றம் திமுக செயலரும், நாரவாரிகுப்பம் பேரூராட்சித் தலைவருமான ஜி.ராஜேந்திரன் தலைமையில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது.

  விழாவில் பெரியார் சிலைக்கு செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சித் துணைத்தலைவர் விப்ரநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா சிலைக்கு திமுக நிர்வாகி வேணு, ஜெய்மதன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

  பெரியார் பதிப்பகம், செங்குன்றம் திமுக அலுவலகம், செங்குன்றம் பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டது.

  செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி துணைத்தலைவர் விப்ரநாராயணன், முன்னாள் துணைத் தலைவர் மா.ந.சண்முகம் நிர்வாகி ஆர்.இ.வேணு, செங்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் துணைத்தலைவர் இரா.ஏ.பாபு, கழக நிர்வாகிகள் ஆர்.சுகுமார், கவுன்சிலர் கபிலன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai