சுடச்சுட

    

    தேமுதிக கவுன்சிலரை தாக்கியவர் கைது

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 16th September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி அருகே தேமுதிக கவுன்சிலரை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 21-வது வார்டு தேமுதிக கவுன்சிலர் ஜெய்சங்கர் (37).

    எளாவூரை அடுத்த துராப்பள்ளம் வீராசாமி நகரில் உள்ள அரசு மதுபானக் கடையில் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த ஜெய்சங்கர், அங்கு சென்று சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    அப்போது அங்கிருந்த ஆனந்தன் (32) என்பவர், பீர் பாட்டிலால் கவுன்சிலரின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த கவுன்சிலர் ஜெய்சங்கர், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai