சுடச்சுட

    

    மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 225 மனுக்கள்

    By திருவள்ளூர்,  |   Published on : 16th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.

    திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை கோரி 33 மனுக்கள், பட்டா கோரி 58 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 38 மனுக்கள், நியாயவிலை அட்டை கோரி 15 மனுக்கள், இதர உதவிகள் கோரி 81 மனுக்கள் உள்பட மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து, தாட்கோ மூலம் திருவள்ளுர் வட்டத்துக்கு உள்பட்ட அதிகத்தூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு தாட்கோ மானியம் ரூ.3.75 லட்சம், வங்கிக் கடன் ரூ.6.38 லட்சம் உள்பட மொத்தம் ரூ.10.66 லட்சம் மதிப்பிலான வேனை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில், பண்டிக்காவனூரைச் சேர்ந்த விவசாயி சாரங்கன், காஷ்மீர் நிவாரண உதவியாக 25 கிலோ அரிசி சிப்பத்தை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, தனித்துணை ஆட்சியர் பரந்தாமன், மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai