சுடச்சுட

    

    மினி பேருந்து கவிழந்து விபத்து:4 பெண்கள் உள்பட 7 பேர் காயம்

    By திருத்தணி  |   Published on : 16th September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி அருகே வளர்புரம் நோக்கிச் சென்ற மினி பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

    திருத்தணியிலிருந்து அரக்கோணம் தாலுக்கா, வளர்புரம் கிராமம் நோக்கி தனியார் மினி பேருந்து திங்கள்கிழமை காலை சென்றுக் கொண்டிருந்தது.

    பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கீழாந்தூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பேருந்தில் இருந்த சரவணன் (29), கோவிந்தாம்மாள் (65), வள்ளியம்மாள் (26), ராணி (25) உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் 4 பேர் பெண்கள்.

    காயமடைந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai