Enable Javscript for better performance
முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.44 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.44 லட்சம்

    By திருத்தணி,  |   Published on : 16th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.44 லட்சம் செலுத்தியுள்ளனர்.

    ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்வது திருத்தணி முருகன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ரொக்கம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக கோயில் உண்டியலில் போட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில், உண்டியலில் உள்ள ரொக்கம், கோயில் தக்கார் வே.ஜெயசங்கர் முன்னிலையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மலைக்கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டது. இந்தப் பணியில் 50-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இதில், உண்டியலில் ரூ.44 லட்சத்து 43 ஆயிரத்து 721 ரொக்கம், 435 கிராம் தங்கமும், 3.50 கிலோ வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai