சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே ஓடும் ரயிலில் மகளிர் பெட்டியில் மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

  இதுகுறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அரக்கோணத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி குமாரி (60). இவரது கணவர் ரயில்வே ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர்.

  இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குமாரி உள்பட 10 பேர் அரக்கோணத்தில் இருந்து திங்கள்கிழமை காலை புறநகர் மின்சார ரயிலில் வந்துக் கொண்டிருந்தனர்.

  ரயிலில் கூட்டமாக இருந்ததால் மகளிர் பெட்டியில் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த இடத்தில் தனித்தனியாக அமர்ந்தும், நின்றபடியும் பயணம் செய்துள்ளனர். அப்போது ஒரு இடத்தில் அமர்ந்த குமாரி, உறங்கியுள்ளார்.

  திருவள்ளூர் வந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருவள்ளூர் ரயில்வே போலீஸில் புகார் அளித்தார்.

  இதன் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஓடும் ரயிலில் செயினை பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai