சுடச்சுட

  

  வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் உள்ளூர் விடுமுறை

  By திருவள்ளூர்,  |   Published on : 16th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளுர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பதவியிடங்களுக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள வாக்குப்பதிவு இடங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பதவியிடங்களுக்கு செப்டம்பர் 18-ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

  இதையொட்டி, திருவள்ளூர் ஒன்றியத்தில் கீழானூர் ஊராட்சி, திருவூர் ஊராட்சி வார்டு எண் 7, காக்களூர் ஊராட்சி வார்டு எண் 8 ஆகிய பகுதிகள்.

  மீஞ்சூர் ஒன்றியத்தில் அனுப்பம்பட்டு ஊராட்சி, ஏறுசிவன் ஊராட்சி வார்டு எண் 1 முதல் 6 வரை, மேலூர் ஊராட்சி வார்டு எண் 9.

  கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஏ.என்.குப்பம் ஊராட்சியும், பூந்தமல்லி ஒன்றியத்தில் திருமணம் ஊராட்சி மற்றும் சோரஞ்சேரி ஊராட்சி வார்டு எண் 5. கடம்பத்தூர் ஒன்றியத்தில் நரசிங்கபுரம் ஊராட்சியும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அஸ்வரேவந்தபுரம் ஊராட்சியும், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் வானகரம் ஊராட்சி வார்டு எண் 6, பாலவேடு ஊராட்சி வார்டு எண் 4, வெள்ளானூர் ஊராட்சி வார்டு எண் 1, புழல் ஒன்றியத்தில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி வார்டு எண் 3 ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு செப்டம்பர் 18-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு தினத்தன்று விடுமுறை அளிக்கவும், அன்றைய தினத்துக்கான ஊதியம் வழங்கவும் வேண்டும்.

  இதற்கு மாறாக செயல்படும் தொழில் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai