Enable Javscript for better performance
அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு: ஊத்துக்கோட்டையில் கடையடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு: ஊத்துக்கோட்டையில் கடையடைப்பு

    By DN  |   Published on : 17th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணி ஆற்றங்கரையில் பொதுப்பணித்துறை சார்பில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத்தையே முக்கியத் தொழிலாக நம்பியுள்ள இந்தப் பகுதி மக்கள் அரசின் முடிவால் அதிர்ச்சி அடைந்

    துள்ளனர்.

    அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும்.

    எனவே, அந்தப் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai