சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தை அடுத்த சீற்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தரணி (22). ஆடு மேய்ப்பவர்.

  இவர் கடம்பத்தூர் மற்றும் செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வயல் வெளியில் திங்கள்கிழமை ஆடு மேய்த்துக்  கொண்டிருந்தாராம்.

  ஆடுகள் ரயில் தண்டவாளப் பகுதிக்கு சென்றதையடுத்து அவற்றை விரட்டிக்கொண்டிருந்தாராம்.

  அப்போது அவ்வழியே சென்ற மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே தரணி இறந்தார்.

  இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் சந்தானம் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

  இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai