சுடச்சுட

    

    ஆளில்லா ரயில்வே கடக்கும் பாதை மூடல்: பொதுமக்கள் ரயில் மறியல்

    By DN  |   Published on : 17th September 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணியில் ஆளில்லா ரயில்வே கடக்கும் பாதை மூடப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருத்தணி நகராட்சிக்குள்பட்டது எம்.ஜி.ஆர். நகர். இந்தப் பகுதியிலிருந்து புதூர்மேடு அருந்ததிக் குடியிருப்புக்குச் செல்லும் வழியில் ரயில்வே இருப்புப் பாதை செல்கிறது.

    இதனைக் கடந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஆளில்லாத கடக்கும் பாதை  அமைக்கப்பட்டது.

    இந்த வழியாக புதூர்மேடு மக்கள் திருத்தணி பஜார், எம்.ஜி.ஆர். நகருக்கு சென்று வந்தனர். இதனிடையே, ஓராண்டுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம், அங்கு புதிய சுரங்கப்பாதை அமைத்தது.

    ஆனால், அந்தப் பகுதி மக்கள் சுரங்கப்பாதை வழியாக செல்லாமல் ஆளில்லாத கடக்கும் பாதை வழியாக சென்று வந்தனர்.

    இந்நிலையில், இந்தக் கடக்கும் பாதையை ரயில்வே நிர்வாகத்தின் செவ்வாய்க்கிழமை இரும்பு கம்பிகளால் மூடினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.ஜி.ஆர். நகர், புதூர்மேடு பகுதி மக்கள் ஏராளமானோர் திருத்தணியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயிலை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருத்தணி கோ.அரி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பாண்டியன், வட்டாட்சியர் ரமேஷ், திருத்தணி, அரக்கோணம் ரயில்வே போலீஸார்  அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இன்னும் இரண்டு நாள்களில் இந்த ரயில்வே கடக்கும் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    இந்த ரயில் மறியல் போராட்டத்தால் அந்த மார்கத்தில் ஒரு மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai