சுடச்சுட

    

    சாலை விபத்து: சென்னையைச் சேர்ந்த விற்பனை மேலாளர் சாவு

    By DN  |   Published on : 17th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் அருகே போரக்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் இறந்தார்.

    சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமாரின் மகன் விஜயகுமார் (42). இவர் தனியார் தொழிற்சாலையில் விற்பனை மேலாளராக இருக்கிறார்.

    இந்த நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதிக்கு வேலை விஷயமாக வந்தார்.

    அப்போது புதுவாயல் அருகே உள்ள போரக்ஸ் பகுதியில் சாலைத் தடுப்பில் இவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் சென்னை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai