Enable Javscript for better performance
நாகராஜகண்டிகையில் இரு வீடுகளில் பணம், நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் திங்கள்கிழமை இரு வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள், பணம், நகையை திருடிச் சென்றனர்.

    நாகராஜகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தியின் மகன் மவுன்ராஜ்(25). இவர் அந்தப் பகுதியில் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வாகன ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மவுன்ராஜின் மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் மவுன்ராஜ் இரவுப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் திங்கள்கிழமை அதிகாலை மவுன்ராஜின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கட்டிலின் அடியில் மறைத்து வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

    அதேபோல அதே பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமியின் மகன் மதுரை (48). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை எதிரே பெட்டிக் கடை, சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். எப்போதும் இரவில் வரும் வாகனங்களுக்காக இவர் இரவு முழுக்கக் கடையை நடத்தி வருவதால் இரவு நேரத்தில் வீட்டில் தங்குவதில்லை. இந்நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.13,500-ஐ திருடிச் சென்றனர். இந்தச் சம்பவங்கள் குறித்து மவுன்ராஜ், மதுரை அளித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai