Enable Javscript for better performance
பல்வேறு இடங்களில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

    இதில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 71 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழைப் பெய்தது.

    இந்த மழையால் பல பகுதிகளில் உள்ள சாலைகள் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளன. திருவள்ளூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் புதை சாக்கடைப் பணிகள் முடிவடைந்த இடத்தில் சாலை அமைக்காததால் பல வாகனங்கள் பள்ளத்திலும், சேற்றிலும் சிக்கி சிறு விபத்துகள் ஏற்பட்டன.

    மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பொன்னேரி 43, ஊத்துக்கோட்டை 71, பள்ளிப்பட்டு 15, கும்மிடிப்பூண்டி 25, திருத்தணி 48,  திருவள்ளூர் 38, பூந்தமல்லி 15, அம்பத்தூர் 26, பூண்டி 37, செம்பரம்பாக்கம் 51, சோழவரம் 14, தாமரைப்பாக்கம் 18, ஆர்.கே.பேட்டை 13, திருவாலங்காடு 44, செங்குன்றம் 14.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai