சுடச்சுட

  

  செங்குன்றத்தை அடுத்த புழல் சிறையில் இருந்த தண்டனைக் கைதி, தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

  சென்னை அடையாறு கேனல் பேங்க் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ்(53). இவரது மனைவி மகேஸ்வரி, மகன் கெளதமன்.

  கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் மனைவி, மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் அசோக்ராஜ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

  இது தொடர்பாக சென்னை செஷன்ஸ் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அசோக்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

  இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை வழக்கமாக சிறையில் உள்ள கைதிகளை எண்ணிக்கையில், சரிபார்த்தபோது ஒரு கைதி இல்லாதது கண்டு பதற்றம் அடைந்த போலீஸார் சிறையில் உள்ள கட்டடங்கள், கழிவறைகள், சமையல் அறைகள், மருத்துவமனைகள், நூலகம், காய்கறித் தோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  பின்னர் சிறையில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட தண்ணீர்த் தொட்டியில் அசோக்ராஜ் சடலமாக மிதப்பதைக் கண்டு சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்து புழல் போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறை அலுவலர் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai