சுடச்சுட

    

    ஊராட்சிகளில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ரூ.20 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், நான்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ், திருத்தணி ஒன்றியம், அகூர், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுôர், நேசனுôர், ரங்காபுரம் ஆகிய நான்கு இடங்களில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க, புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டன.

    இதற்காக, ரூ.20 லட்சத்தில், 20 ஆயிரம், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நான்கு குடிநீர்த் தொட்டிகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டரும் விடப்பட்டது.

    தற்போது நான்கு குடிநீர்த் தொட்டிகளும் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு விடும் நிலையில் உள்ளன. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியது:

    "நான்கு ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முழுமை அடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். இந்த குடிநீர்த் தொட்டியால், நான்கு கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னைத் தீர்க்கப்படும்' என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai