சுடச்சுட

  

  வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

  By DN  |   Published on : 17th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயன்றனர்.

  கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதியில் பழைய கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

  இந்த வேளாண்மைச் சங்கத்தில் புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் உறுப்பினர்களாக இருந்து விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றனர்.

  இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் சிலர், இந்த அலுவலகத்தின் இரும்புக் கதவை உடைத்துள்ளனர்.

  பின்னர், அலுவலகத்தின் கதவை உடைக்க முயன்றனர். அப்போது அங்கு ஆள்நடமாட்டம் தொடங்கிவிட்டதால் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றனர். இந்த அலுவலகத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

  வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai