Enable Javscript for better performance
ஆந்திரத்துக்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்துக்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 18th September 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் வழியே ஆந்திரத்துக்கு கடத்தயிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பாதிரிவேடு போலீஸார் புதன்கிழமை கைப்பற்றினர்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தில் போந்தவாக்கம் செல்லும் சாலையில் பாதிரிவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தயாளன் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அந்த வழியே வந்த வேன் ஒன்று போலீஸாரின் சோதனையைக் கண்டதும் சற்று தொலைவிலேயே நின்று அதில் இருந்து ஓட்டுநர் ஓட்டம் பிடித்தார்.

    தொடர்ந்து உதவி ஆய்வாளர் அந்த வேனை சோதித்த போது அதில் 19 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    இந்த ரேஷன் அரிசி பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்டு மாதர்பாக்கத்தில் இருந்து போந்தவாக்கம் வழியே ஆந்திரத்துக்கு கடத்தப்பட வேனில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 19 மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசி பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai