சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடிகள்: ஆட்சியர் ஆய்வு

    By திருவள்ளூர்,  |   Published on : 18th September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

    திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

    இதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அங்கு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார். வாக்குச்சீட்டு வழங்கப்படாத வாக்காளர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    வாக்குச்சாவடிலிருந்து 200 மீட்டருக்குள் தேர்தல் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது எனவும், போலீஸாரை பாதுகாப்பு பணிகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், நரசிங்கபுரம், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் கீழானூர், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் திருமணம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் அனுப்பம்பட்டு ஆகிய வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai