சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

    By திருவள்ளூர்,  |   Published on : 18th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரை அடுத்த திரூரில் இயங்கி வரும் நெல் ஆராய்ச்சி மையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு காய்கறிப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கருத்தரங்கத்துக்கு நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் அகிலா தலைமை வகித்தார். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் சுமதி வரவேற்றார்.

    இதில் தோட்டப்பயிர் விவசாயிகளுக்கு காய்கறிப் பயிரின் பாதுகாப்பு, அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. மேலும், காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துதல், உயிரியல் பூச்சி கட்டுப்பாட்டு முறை உள்ளிட்டவை குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, காய்கறிப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் குறித்தும் அதன் பாதுகாப்பு மேலாண்மை குறித்தும் பேராசிரியர் தேவநாதன், உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, மணிமாறன் மணிமேகலை ஷீபா உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். போராசிரியர் மஞ்சுளா நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai