சுடச்சுட

  

  அரசாணை 363-இன் படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் பயன்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஓய்வூதிதாரர்கள் அரைநாள் தர்னா போராட்டம் நடத்தினர்.

  திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த தர்னா போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சம்பந்தமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

  இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைமைச் செயலர் ராமலிங்கம், டி.ஆர்.ஓ. சங்க மாவட்டத் தலைவர் சேஷாத்திரி ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், அரசாணை 363-ஐ அனைத்து ஓய்வூதியதாரர்களும் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள பாதக அம்சங்களைக் களைய வேண்டும். அரசாணை 71-ஐ முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

  பொன்னேரி வட்டச் செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai