Enable Javscript for better performance
குடியிருப்புகளுக்கு மத்தியில் ஆபத்தான மின் கம்பம்- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புகளுக்கு மத்தியில் ஆபத்தான மின் கம்பம்

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 18th September 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மின் கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் மின் கம்பம் அமைக்கும்போது மின்வாரியத் துறையினர் தவறுதலாக பொது வழி இருக்கும் பகுதியில் மின் கம்பத்தை நடாமல் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மின் கம்பத்தை நட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 1 மாதமாக அந்த மின் கம்பத்தை ஒட்டியுள்ள இடத்தில் அந்த இடத்துக்கு சொந்தக்காரர் வீடு கட்ட தொடங்கியுள்ளார்.

    இந்த நிலையில் அந்த வீட்டுக்கு கழிவுநீர்த் தேக்கத் தொட்டிக்காக அந்த வீட்டின் உரிமையாளர் அவரது இடத்தில் பள்ளம் தோண்டினார்.

    அப்போது அந்த மின்கம்பம் பள்ளத்தின் மீது சாய்ந்துள்ள நிலையில், அந்த கம்பத்தை வேறு இடத்தில் மாற்றக் கோரி அந்தப் பகுதியினர் மின்வாரியத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

    மின்வாரியத் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றித் தருவதாக உறுதி அளித்துள்ள நிலையிலும் ஆபத்தான அந்த மின் கம்பம் அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    அதிலும் அந்த மின் கம்பத்தில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாகவும், தளர்வாகவும் இருப்பதால் அந்த மின் கம்பிகள் எப்போது விழுமோ? என்ற பயத்தில் அந்தப் பகுதி மக்கள் கடந்த சில நாள்களாக இருந்து வருகின்றனர்.

    எனவே மேற்கண்ட மின்கம்பத்தை அருகில் உள்ள பாதுகாப்பான பொது வழியில் மாற்றி அமைப்பதோடு அல்லாமல் புதிய மின் கம்பிகளை அதில் பொருத்த மின்வாரியத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai