Enable Javscript for better performance
கைப்பேசி கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கைப்பேசி கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By செங்குன்றம்  |   Published on : 18th September 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்குன்றம் அருகே கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்குன்றத்தை அடுத்த கொளத்தூர்- பெரம்பூர் பெரியார் நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாக வீடு கட்டி, கைப்பேசி கோபுரம் அமைத்து வருகிறார்.

    இந்தப் பகுதியில் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியை மாற்றுத் திறனாளி ஒருவர் நடத்தி வருகிறார்.

    இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் இதேப் பகுதியில் விநாயகர் கோயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்தப் பகுதி மக்கள் கைப்பேசி கோபுரம் அமைப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், காவல் ஆணையரை சந்தித்து புகார் மனுவும் அளித்துள்ளனர்.

    இருப்பினும் கைப்பேசி கோபுரம் அமைக்கும் நபருக்கு ஆதரவாக, அந்தப் பகுதியில் உள்ள அதிமுக உறுப்பினர், ரெüடிகள் உள்ளிட்டோர் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த கோபுரம், குழந்தைகளின் மூளை வளர்ச்சி, வயதானவர்களுக்கு பாதிப்பு, ஆடு, மாடு, பறவைகள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

    முக்கியமாக குழந்தைகளின் வளர்ச்சியையும், மூளை, நரம்புகள் பாதிக்கப்படும் என்பதால் கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

    மேலும் கைப்பேசி கோபுரம் மைதானங்களிலோ, குடியிருப்புவாசிகளின் ஆதரவுடனோ அமைக்க வேண்டும் என்பது விதிமுறை.

    மேலும் கைப்பேசி கோபுரம் அமைக்கப்படும் கட்டடம் தரமானதாக இருக்க வேண்டும். அதற்கான உரிமம் கட்டடத்துக்கு இருத்தல் வேண்டும்.

    இவை எதுவும் இல்லாமல், ஆளும் கட்சியின் உறுப்பினர், ரெüடிகளின் ஆதரவுடன் கைப்பேசி கோபுரத்தை அமைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்.

    இதனால் அந்தப் பகுதி மக்கள், மழலை மற்றும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கோபுரம் அமைப்பதை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai