நரேந்திர மோடி பிறந்த நாள்: பாஜகவினர் ரத்த தானம்
By திருவள்ளூர், | Published on : 18th September 2014 12:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, பாஜக சார்பில் வேப்பம்பட்டில் உள்ள பாலவிஹார் மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லத்தில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பாஜக மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.
திருவள்ளூர் ஒன்றியத் தலைவர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் குணசேகர் வரவேற்றார்.
நரேந்திரமோடியின் பிறந்த
நாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜாக
வினர் 100-க்கும் மேற்பட்டோர்
பங்கேற்று ரத்ததானம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பாலவிஹார் திட்ட மேலாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.