சுடச்சுட

    

    பொன்னேரியில் சமுதாய நலக்கூடம் அமைக்கக் கோரிக்கை

    By பொன்னேரி,  |   Published on : 18th September 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னேரியில் ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர், சோழவரம் ஆகிய ஒன்றியங்களும், மீஞ்சூர், ஆரணி, பொன்னேரி ஆகிய 3 பேரூராட்சிகளும் உள்ளன.

    இவற்றில் 500-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் அமைந்துள்ளன. இதுதவிர, பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களும் உள்ளன.

    இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீட்டுத் திருமணம், சடங்கு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை உறவினர்கள் வருகை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பொன்னேரி பகுதியில்தான் நடத்துகின்றனர்.

    இந்தப் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அதிக அளவில் வாடகைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    சமுதாயம் நலக்கூடம் அமைக்கப்படுமா?

    கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டன.

    இந்நிலையில், பொன்னேரியில் சிறிய அளவில் பயனின்றி இருக்கும் சமுதாய நலக்கூடத்தைக் காரணம் காட்டி, ரூ.10 லட்சம் செலவில் திருவாயர்பாடியில் உள்ள பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தின் மாடியில் மன்றக்கூடம் அமைக்கப்பட்டது.

    இதனால், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி, மன்றக் கூடத்துக்குச் சென்றுவிட்டது.

    இதனால், இருந்தும் பயனில்லாமல் உள்ள சமுதாய நலக்கூடத்தைப் பயன்படுத்த முடியாமலும், திருமண மண்டபங்களுக்கு அதிக அளவில் கட்டடணம் கொடுத்தும் ஏழை மக்கள் சிரமப்பட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    எனவே, பொன்னேரி, அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் நலன் கருதி, அந்தப் பகுதியில் நவீன சமுதாய நலக்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai