சுடச்சுட

    

    மின் தகன மேடைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

    By செங்குன்றம்,  |   Published on : 18th September 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்குன்றத்தை அடுத்த புழல் பகுதியில் நவீன மின்சார எரி தகன மேடைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை மாநகராட்சி, புழல் 23-ஆவது வார்டில் உள்ள சுடுகாட்டில் மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சத்தில் நவீன மின்சார தகன எரிமேடை கட்டுமானப் பணிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

    ஆனால் கட்டுமானப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனால் புழல் பகுதியில் உள்ளவர்கள் சடலங்களை எரிப்பதற்காக 10 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்சார தகன மேடைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் அகிலா அந்தோணியிடம் கேட்டபோது, "நவீன மின்சார எரி தகன மேடைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள், மண்டல அதிகாரிகளிடம் நேரில் சென்று கூறியுள்ளேன்.

    ஆனாலும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai