சுடச்சுட

  

  திருவள்ளூர் சமூக நலப்பேரவை சார்பில் கா.மு.ந. சகோதரர்கள் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

  திருவள்ளூர் சமூக நலப்பேரவை நிர்வாகிகள் தனபால், சம்மந்தய்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

  பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஸ்ரீபன் சற்குனம் வரவேற்றார். விழாவில் அண்ணாவின் 106-வது பிறந்தநாள் விழா, பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழாவையொட்டி அண்ணாவும், பெரியாரும் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் குறித்து மாணவர்களிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

  அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தமிழ் ஆசிரியர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai