Enable Javscript for better performance
அரசின் புதுவாழ்வுத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரசின் புதுவாழ்வுத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 19th September 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி அருகே தமிழக அரசின் புதுவாழ்வுத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அண்மையில் ஆய்வு செய்தார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் தாமரைக்குப்பம் பகுதியில் தமிழக அரசின் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் பல்வேறு நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் காய்கறிப் பயிரிடல், நெற்பயிர் உற்பத்தி ஆகியவையும் நடைபெற்று வருகின்றன.

    இவற்றை ஆட்சியர் கொ.வீரராகவராவ் அண்மையில் ஆய்வு செய்தார். அப்போது, தாமரைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்கள் பகுதியில் பேருந்து வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், அப்பகுதியில் யாரேனும் படித்துவிட்டு ஓட்டுனர் உரிமம் பெற்றவராய் இருந்தால் மாவட்ட தொழில் மையம் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வசதியுடன் மினி பேருந்து அல்லது வேன் வாங்கித்தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    பின்னர் அவர், அங்கிருந்த சிறுவர்களிடம் அவர்கள் என்ன படிக்கிறார்கள் என கேட்டபோது, சிறுவர்கள் பலர் பள்ளிக்குச் செல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்களின் பெற்றோரிடம், குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் வீரணன், புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் சிவகாமி, தாமரைக்குப்பம் ஊராட்சித் தலைவர் செல்லையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai