சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை காலையில் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

    முகாம் நடைபெறும் இடங்கள்: திருவள்ளுர் வட்டத்தில் கண்ணூர் வருவாய் கிராமத்துக்கு கண்ணூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்திலும், பூந்தமல்லி வட்டத்தில் (ஜமீன்)கொரட்டூர் - "பி' வருவாய் கிராமத்துக்கு மேல்மணம்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலும், பொன்னேரி வட்டத்தில் தேவம்பட்டு, அகரம் வருவாய் கிராமத்துக்கு அகரம் அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்திலும் முகாம் நடைபெறும்.

    கும்மிடிப்பூண்டி வட்டத்தில் சிறுபுழல்பேட்டை - 2 வருவாய் கிராமத்துக்கு அந்தப் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும் இந்த முகாம் நடைபெறும்.

    மேலும், திருத்தணி வட்டத்தில் தாழவேடு வருவாய் கிராமத்துக்கு அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திலும், பள்ளிப்பட்டு வட்டத்தில் ஈச்சம்பாடி வருவாய் கிராமத்துக்கு பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலக வளாகத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்

    பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai